#

#

#

#

#

#

#

#

#

#

Friday, January 09, 2015

இலங்கை அதிபர் தேர்தல்: மைத்ரிபால சிறிசேன வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். அவர் ராஜபக்சேவை விட சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.

ராஜபக்சே 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றுள்ளார். சிறிசேன 51.28 சதவிகித வாக்குகளையும், ராஜபக்சே 47.58 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். தமிழர்கள் அதிகம் நிறைந்த கிளிநொச்சியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 38ஆயிரத்து 856 வாக்குகளும், ராஜபக்சேவுக்கு 13ஆயிரத்து 300 வாக்குகளும் கிடைத்துள்ளன. சிங்களர் நிறைந்த காலியில் மைத்ரிபால சிறிசேன 39ஆயிரத்து 547 வாக்குகளையும், ராஜபக்சே 23ஆயிரத்து 184 வாக்குகளையும் பெற்றுள்ளனர். முல்லைத்தீவில் சிறிசேனவுக்கு 35ஆயிரத்து 441 வாக்குகளும், ராஜபக்சேவுக்கு 7ஆயிரத்து தொள்ளாயிரத்து 35 வாக்குகளும் கிடைத்தன. தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சே, இன்று காலை ஆறரை மணி அளவில் அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையில் இருந்து வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்பாக, ராஜபக்சே பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேசியதாக, அதிபர் மாளிகை ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை, அதிபர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் அதிகாரபூர்வ அதிபர் மாளிகையான அலரி மாளிகைக்கு பதிலாக தனது சொந்த மாவட்டத்திலுள்ள இல்லத்திலிருந்து ஆட்சி செய்யப்போவதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Courtesy: Puthiyathalaimurai.

Thursday, January 08, 2015

சுண்டல் விற்கும் பிஎச்டி மாணவர்- விடாமுயற்சி, தன்னம்பிக்கை


“எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா சுப்பிரமணியன், துணிக்கடையில் விற்பனையாளராக இருந்தார். அம்மா சரஸ்வதி, 2 அக்காள், 2 அண்ணன், 1 தங்கை என மொத்தம் 6 பேர். வறுமையான சூழலில் அக்காள்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடுமையான பண பிரச்சினை காரணமாக வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப எங்கள் குடும்பம் முடிவு செய்தது.

படிப்புக்காக தனது அண்ணனுடன் கைகோர்த்து சுண்டல் வாளியை தூக்கியபடி, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் சுண்டல் விற்பனை செய்து வருகிறார், பிஎச்டி பட்டதாரியான பழனிராஜ்.
புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞரை பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் அறியாத விஷயம். பரபரப்பான வியாபாரத்துக்கு நடுவே பிஎச்டி படிக்கும் இளைஞர் பழனிராஜை நேரில் சந்தித்தபோது, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
புதுச்சேரி கடற்கரையில் சுண்டல் விற்பனை செய்யும் பழனிராஜ் அப்போது, 1998-ம் ஆண்டு நான் 8-ம் வகுப்பு படித்தேன். என்னையும், மற்றொரு அண்ணன் சரவணக் குமாரையும் வேலைக்கு போகுமாறு வீட்டில் தெரிவித்தனர். எங்களுக்கு படிக்க ஆசை. அதனால் புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்து யோசித்தோம். அப்போதுதான், பீச்சில் சுண்டல் விற்பனை செய்ய முடிவு எடுத்தோம்.
முதலில் சுண்டல் விற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் மிகவும் அமைதியானவன். கூவி விற்கக்கூடத் தெரியாது. சில சமயம் சுண்டல் விற்காமலேயே 
                                                                            புதுச்சேரி கடற்கரையில் சுண்டல் விற்பனை செய்யும் பழனிராஜ்
போய்விடும். அதை என்ன செய்வது என்று தெரியாது. வீட்டிலோ வறுமை. சரியான ஆடை கூட இருக்காது.
அதனால், அண்ணனின் ஆடையை போட்டுக் கொள்வேன். இந்த நிலையில், சுண்டல் விற்றவாறே நான் படிப்பது பள்ளியில் பலருக்கும் தெரிய வந்தது. நான் அப்போது புதுச்சேரியில் உள்ள வீரமாமுனிவர் அரசு பள்ளியில் படித்து வந்தேன். எனது நிலையை உணர்ந்த என்னுடைய ஆசிரியர்கள் பத்மாவதி, பாலசுந்தரம், ராமதாஸ் ஆகியோர் உதவி செய்தார்கள்.
சுண்டல் விற்றவாறே படித்து, 10-ம் வகுப்பில் 442 மார்க் எடுத்தேன். அதையடுத்து வஉசி அரசு மேல்நிலைப ்பள்ளியில் சேர்ந்தேன். பின்னர் மேல்படிப்பு படிக்கும் ஆசையுடன் தாகூர் கல்லூரியில் பிஏ தமிழ் சேர்ந்தேன். அதன்பிறகு, எம்ஏ, எம்பில் முடித்து விட்டு, கடந்த 2010 முதல் வைணவ சிற்றிலக்கியங்கள் பற்றி பிஎச்டி பண்றேன். 12 ஆழ்வார்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.
படிப்புக்கு இடையே 2008-ல் நெட் தேர்விலும், 2013-ல் ஜேஆர்எப் (இளநிலை ஆராய்ச்சியாளர்) தேர்விலும் தேர்ச்சி பெற்றதால் பல்கலைக்கழகத்தில் இருந்து உதவித் தொகை கிடைக்க தொடங்கியுள்ளது. எனினும், இப்போதும் நான் சுண்டல் விற்கிறேன்.
எனது தந்தையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், காலையில் எழுந்து சுண்டல், வடை, பஜ்ஜிக்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் தருவேன். எனது அம்மா அதை தயாரிப்பார். நான் பல்கலைக்கழகம் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு மாலை 6 மணிக்கு மேல் சுண்டல், சமோசா, போளி, கட்லெட், பஜ்ஜி, வடை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பீச், நேரு வீதிக்கு விற்க வருவேன். விற்பனையை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவேன்.
பல்கலைக்கழக உதவித் தொகை கிடைத்தாலும் இந்த சுண்டல் வியாபாரம் மூலமாக எனது சகோதரிகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடிகிறது. என்னுடன் சுண்டல் விற்பனை செய்த எனது அண்ணன் சரவணக்குமார் தற்போது எம்ஏ, எம்பில், பிஎட் முடித்து அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மற்றொரு அண்ணன் பாலமுருகன் பிளாட்பாரத்தில் துணி விற்கிறார்.
நமக்குள் ஆசையும், முயற்சியும் இருந்தால் நம்மை ஊக்கப்படுத்த சமுதாயத்தில் பலரும் உள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுண்டல் வாங்குவோர் தொடங்கி, பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் என பலரும் அளித்த ஊக்கம்தான் பிஎச்டி வரை என்னை கொண்டு வந்துள்ளது” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் பழனிராஜ்.
நன்றி : தி தமிழ் இந்து 

மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு

சுமார் 30 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய ரக ஆண்டிபயாடிக் மருந்து ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.

நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.
பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.
இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.புது ரக ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு
1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டன. உதாரணமாக மருந்துகளால் குணப்படுத்தமுடியாத எலும்புறுக்கிநோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப்படாததொரு நிலையை எட்டியிருக்கிறது.
மீண்டும் மண்ணில் இருந்து ஆய்வு துவங்கியது
இதன் விளைவாக, எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மசெஷூசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கினார்கள்.
மண்ணில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்கமுடியும்.
எனவே நுண்ணுயிரிகள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக்கொண்டார்கள்.
இந்த ஆய்வின் முதல்கட்டமாக, பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரணத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.
இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியங்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லாவற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரியங்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன.
சில நாட்களுக்குப்பிறகு இந்த பாக்டீரியங்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப்பட்டது.
அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்டீரியத்துக்கு அந்த மண்ணில் இருந்த நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை/தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவற்றை பரிசோதனை செய்தபோது அதில் ஆண்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

Courtesy: The Tamil Hindu