#

#

#

#

#

#

#

#

#

#

Thursday, December 15, 2016

உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு 9வது இடம்....

உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். 

2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 10 இடங்களில் பிரதமர் மோடி, 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதொடர்பாக, அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


130 கோடி மக்கள்தொகைக் கொண்ட இந்தியாவில், நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். சமீப காலமாக, அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை அலுவல்பூர்வமாக சந்தித்து, ஒரு சர்வதேசத் தலைவராக மோடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். மேலும், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்காக, சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொண்டு வரும் முக்கியத் தலைவராகவும் மோடி விளங்குகிறார்.
இது மட்டுமின்றி, கருப்புப் பணம், கள்ளப் பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்றும் கடந்த மாதம் அதிரடியாக அறிவித்தார். 740 கோடி மக்களைக் கொண்ட இந்தப் பூமிப் பந்தில், 74 தலைவர்கள் உலகை மாற்றியமைக்கும் வல்லமையுடன் திகழ்கிறார்கள் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, உலகின் செல்வாக்கு மிக்க பெண் தலைவராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜீ ஜின்பிங் (4-ஆவது இடம்), போப் பிரான்சிஸ் (5-ஆவது இடம்), "மைக்ரோசாஃப்ட்' இணை நிறுவனர் பில்கேட்ஸ் (7-ஆவது), "ஃபேஸ்புக்' தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பக் (10-ஆவது இடம்), பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் (23-ஆவது இடம்), ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் (32-ஆவது இடம்), வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் (43) ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர்.
"ஜியோ' 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தகவல் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, 38-ஆவது இடத்தையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 48-ஆவது இடத்தையும், "மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, 51-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Monday, December 12, 2016

பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்!!!!!

இலவசங்களாலும் அதிரடி சலுகைகளாலும் இந்திய தொலைத்தொடர்பு சந்தையை ஒரு கலக்கு கலக்கிய கையேடு சம்பீத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ அதன் இலவச சலுகைகளை ஹேப்பி நியூ இயர் சலுகை என்ற பெயரில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்து வாடிக்கையாளர்களின் வயிற்றில் பாலை வாற்றார் மறுபக்கம் போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். அதே கையோடு ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை சார்ந்த தகவலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சார்ந்த எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் கூட ஜியோ டிடிஎச் சேவைகள் விரைவில் சந்தைக்குள் நுழைவது உறுதியாகிவிட்ட பட்சத்தில் இப்போதே டிஷ்டிவி, டாடாஸ்கை, ஏர்டெல் டிடிஎச் மற்றும் ஆக்ட் பைபர்நெட் போன்ற டிடிஎச் சேவை வழங்குநர்கள் முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து தூக்கம் தொலைக்க ஆரம்பித்து விட்டனர். அது சரி முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும்..?? ஜியோ டிடிஎச் சேவையால் என்ன கொண்டு வர முடியும்.?

டிசம்பர் 15 அன்று எங்களின் முந்தைய அறிக்கைப்படி மற்றும் பிற ஊடக வதந்திகளின் படி, ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 15 அன்று அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாக அதன் டிடிஎச் சேவையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இப்போது வரையிலாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை)

ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் அதுமட்டுமின்றி நிறுவனத்தின் டிடிஎச் சேவையானது மற்ற டிடிஎச் சேவை வழங்குநர்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் செட்-டாப் பாக்ஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வதந்தி நிலவுகிறது. உடன் ஜியோ செட் டாப் பாக்ஸ்கள் கூகிள் ப்ளே உடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆக அதில் ப்ரீ இன்ஸ்டால்ட்டு ஆப்ஸ்கள் மற்றும் கேம்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அனைத்திற்கும் மேலாகஜியோ டிடிஎச் சேவையானது 300+ சேனல்கள் வரை வழங்குமாம்.

வெளியாகும் முன்பே விளைவுகள் வெளியாகப்போகும் ஜியோ டிடிஎச் சேவையை மனதில் கொண்டு கிராமப்புற இந்தியா உட்பட நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செல்லும் பொருட்டு பிராந்திய மொழி உள்ளடக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தும் டிஷ்டிவி சமீபத்தில் அதன் பயனர்களுக்கு பல புதிய எச்டி பிராந்திய சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடவடிக்கை அதுமட்டுமின்றி, இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டிடிஎச் சேவை வழங்குநர் ஆக விளங்கும் வீடியோகான் டி2எச் உடன் டிஷ்டிவி இணைந்துள்ளது. இங்கே கேள்வி என்னெவென்றால் இந்த நடவடிக்கை சந்தையில் எடுக்க காரணம் வரவிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை தாக்குவதற்க்கா.? என்பது தான்.

ஏர்டெல் என்ன செய்கிறது.? ஏர்டெல் டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் துறையில் பெரிய சவாலாக வளர்ந்து நிற்கிறது. இந்நிறுவம் சமீபத்தில் அதன் 21 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மற்ற டிடிஎச் வழங்குநர்களுடன் ஏற்கனவே ஒரு கடுமையான போட்டியில் இருக்கும் ஏர்டெல், அடுத்து புதிதாக களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைக்கு ஈடு கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பிடும்போது ஏர்டெல் சேவையில் ஈடுகொடுத்தாலும் மிக கட்டண அளவீடுகளை கொண்டுள்ளதால், ஜியோ எளிமையாக ஏர்டெல் சேவையை பின்தள்ளும் என்றும் வதந்திகள் படி, ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது ஜியோவின் சேவை கட்டண அளவீடுகள் பாதி தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டாடாஸ்கை நிலை என்ன.? ஜியோவை ஏர்டெல் சமாளிக்கும் என்ற நம்பிக்கை ஒருபக்கமிருக்க, டாடாஸ்கை - நாட்டின் சிறந்த சேவை வழங்குநர்களில் ஒன்றாக இருந்து வருகிறது மற்றும் மற்ற டிடிஎச் வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில் டாடாஸ்கை 65 பிரத்தியேக சேனல்களை அளிகப்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஜியோ டிடிஎச் சேவைக்கு எதிர்பாராத ஒரு போட்டியை டாடாஸ்கை எதிர் நிற்கலாம்.


Friday, December 09, 2016

SBI ஏ டி எம் அட்டையை பாதுகாக்க அதிநவீன வசதி அறிமுகம்!!!

SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளைஎளிமைப்படுத்தி வழங்கிவரும் அதே வேளையில் வாடிக்கையாளர்கள்தங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாளவும் சில வசதிகளை அறிமுகம்செய்துவருகிறது.


உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதலே பலர் தங்களதுபண அட்டையை (ATM) வைத்துதான் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்பண அட்டைகளைஅதிகமாக பாமர மக்களும் பயன்படுத்த துவங்கியுள்ள வேளையில்சைபர் உலகின் தாக்குதலில் இருந்து வாடிக்கையாளர்களை காக்க ATM அட்டையை தேவையேற்படும் போது ON / OFF செய்யும் வசதியைஅறிமுகம் செய்துள்ளது.



Androidமொபைல்Playstoreல்கிடைக்கும்SBIQuick செயலியின் மூலம்ஏற்கெனவே வங்கி இருப்புசிறு அறிக்கை போன்ற சேவைகளை மிஸ்டுகால் மற்றும் குறுந்தகவல் மூலமாக பெற்றுவருகிறோம்கூடுதலாகதற்போது ATM அட்டையை பணம் எடுக்கும்போதும்பொருட்களைவாங்கும்போதும் மொபைலில் ATM அட்டையை ON செய்து பிறகுஅட்டையின் தேவை இல்லாத போது அட்டையை யாரும் பயன்படுத்தாதவகையில் OFF செய்து வைத்துவிடலாம்.

Note: Every time for on or off deduct Rs 1.50 

நீட் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழ், அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இதுகுறித்த அறிவிப்பை சுகாதாரத்துறை இணைஅமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவம் பயில தனியாக நீட் எனும் பொதுநுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. 
இந்நிலையில், நீட்(NEET) தேர்வை தமிழ் உட்பட பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ், குஜராத்தி, அசாமி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி உட்பட மொழிகளில் நீட் பொதுநுழைவுத் தேர்வை எழுத முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தேர்வெழுதுவது நடைமுறையில் உள்ளது.

Wednesday, December 07, 2016

சரித்திரம் தன்னில் நிற்பார்- ஜெயலலிதா


வாழ்க்கை முழுவதும் குழந்தைப்பருவத்திலிருந்து பள்ளிக்கூடப்பருவம், சினிமா, அரசியல் என்று எல்லாக் காலக்கட்டங்களிலும் பல்வேறு போராட்டங்களை சந்தித்து, எல்லா போராட்டங்களிலும் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்று பரணி பாடிய ஜெயலலிதா, கடந்த 75 நாட்களாக முதன்முறையாக மரணப்போராட்டத்தில், தோல்வியடைந்து இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். முதல்முறையாக அவர் சந்தித்த ஒரு தோல்வியென்றால், அது இதுவாகத்தான் இருக்கும். 1948–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24–ந் தேதி கர்நாடக மாநிலத்தில் ஜெயலலிதா பிறந்தார். செல்வச்செழிப்போடு பிறந்த ஜெயலலிதா, கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். அந்தப்பருவத்திலேயே ஏழ்மையை சந்தித்தார். அதன்பிறகு அவரது தாயார் சந்தியா, சினிமாவில் நடிக்கத்தொடங்கி அந்த வருமானத்தில் தான் வாழ்க்கை நடந்தது. 

ஜெயலலிதா சிறுவயதில் பெங்களூருவில் உள்ள, பிஷப் காட்டன் பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்து சென்னை சர்ச்பார்க் கான்வென்டிலும் படித்தார். படிப்பில் படுசுட்டியாக விளங்கிய ஜெயலலிதா, தான் ஒரு பிரபல வக்கீலாக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தார். ஆனால், காலம் வேறு கணக்குப்போட்டு விட்டது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேரவேண்டிய அவர், விருப்பமில்லாமலே, சினிமா வாழ்க்கையில் நுழைந்தார். எப்படி படிப்பில் ஜொலித்தாரோ அதுபோல, சினிமா வாழ்க்கையிலும் ஒளிமிகுந்த நட்சத்திரமாக ஜொலித்து, 120–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு அவர் நினைக்காமலேயே அரசியலில் நுழைய வேண்டிய நிலை அமைந்தது. 1982–ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அந்தக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்தார். 1984–ல் டெல்லி மேல்–சபை உறுப்பினரானார். அவருடைய ஆங்கிலப்பேச்சும், இந்தி மொழியிலிருந்த ஆற்றலும், இந்திராகாந்தி முதல் எல்லாத்தலைவர்களையும் கவர்ந்தது. 1987–ல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பையேற்று, அந்தக்கட்சியை கட்டிக்காத்தார். 1991, 2001, 2011, 2016–ல் நடந்த தேர்தல்களில் வெற்றிப்பெற்று முதல்–அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தான் நினைத்ததை சாதிக்கும் போராட்டக்குணமுடைய ஜெயலலிதா, மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வேண்டுகோளாக விடுத்து, நிறைவேறாவிட்டால் போராடி பெற்றுள்ளார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தது அவருடைய போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி தான். இவருடைய ஆட்சியில் பெண்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைத்தன. 

முதன்முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நேரத்தில் 1992–ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் வந்த ஒரு செய்தியைப் பார்த்து தான், ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தைக்கொண்டு வந்தார். ஏறத்தாழ 4,500–க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் இந்தத்திட்டத்தால் உயிர்ப்பிழைத்துள்ளனர். இந்த திட்டத்தை அன்னை தெரசாவே ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்து மனதாரப் பாராட்டினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பேசும் ஆற்றல் கொண்ட ஜெயலலிதா அந்தந்த மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய்மொழியிலேயே பேசி எல்லோரையும் ஈர்த்தார். மனோதிடம், அன்பு, ஆற்றல், கருணை, துணிவு, மனஉறுதி போன்ற பல குணநலன்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா ஒரு வெற்றித்திருமகளாகவே வாழ்ந்தார். முதல்–அமைச்சராக, நான்குமுறை பொறுப்பேற்று சாதனைகள் பல புரிந்த அவர் ஒரு சரித்திரமாகிவிட்டார். தமிழக அரசியலில் அவருடைய மறைவு நிச்சயமாக ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. 

அ.தி.மு.க.வின் அரணாக இருந்து, எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு அந்தக்கட்சியை போற்றிப்பாதுகாத்து வந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே மிகப்பெரிய இழப்பாகும். ஒட்டுமொத்த தமிழகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர்கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரர் மானம்காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற பாடல், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதற்கு மிகவும் பொருத்தமானவர் ஜெயலலிதா. என்றென்றும் மக்களின் மனதிலும் நிற்பார்; சரித்திரம் தன்னிலும் நிற்பார்.

போர்க்கள வாழ்க்கையை பூக்களமாக மாற்றி மகுடம் சூடியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!

சென்னை : ஜெயலலிதாவின் அரசியல் பாதை முட்களால் நிரம்பியது. எந்த ஒரு தலைவரையும் போலவே ஜெயலலிதாவும் சவால்களால் சூழப்பட்டவர்தான். ஆனால் அத்தனை சவால்களையும் ஜஸ்ட் லைக் தட் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறி வெற்றியை தனதாக்கிக் கொண்ட வித்தியாசத் தலைவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அரசியல் மாச்சரியங்களைக் கடந்து ஜெயலலிதாவை அனைவருக்கும் பிடிக்கக் காரணம் அந்த தைரியமும் தன்னம்பிக்கையும்தான். 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி மாண்டியா மாவட்டத்தில் ஜெயராம் - வேதவள்ளி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஜெயலலிதா. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தனது பூர்வீக ஊர் என்று அடிக்கடி கூறுவார் ஜெயலலிதா. இவரது தாத்தாவின் குடும்பம், ஸ்ரீரங்கத்தில் இருந்து மேல்கோட்டைக்கு இடம் பெயர்ந்த குடும்பம் என்றும் கூறுகின்றனர். தந்தை ஜெயராமின் மறைவிற்குப் பின்னர் பெங்களூருவிற்கு இடம் மாறிய ஜெயலலிதாவின் குடும்பம், அவரது தாயாருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்புகளால் சென்னையின் குடியேறியது. வேதவல்லியாக இருந்த ஜெயலலிதாவின் தாயார் சினிமாவில் நடிப்பதற்காக சந்தியாவாக மாறினார். சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்த ஜெயலலிதா மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில்தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார்.


தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகளின் அதிக பட்ச ஆசை, நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும், பிரபல நாயகர்களின் ஜோடியாக நடித்து புகழ் பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கிய ஜெயலலிதா ஒருவர் மட்டுமே தமிழக வாழ்வில் ஒரு பெண் ஆளுமையாக திகழ்கிறார்.

எம்ஜிஆர் என்ற சக்தி 
1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் நடித்த போதோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவை தனது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார். அப்போதே ஜெயலலிதாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். எம்.ஜி.ஆருடன் மட்டும் ஜெயலலிதா இருபத்தி எட்டு படங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாக நடித்தார்.


 அரசியல் வாழ்க்கை
1981ம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன் என்றுதான் கூறவேண்டும்.
பிரச்சார பீரங்கி 
அதிமுகவில் இணைந்து பிரச்சார பீரங்கியாக உருவெடுத்தார். அவரது வருகை, பல அதிமுக புள்ளிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது, எரிச்சலைக் கொடுத்தது. அவரை அடக்க முடியாமல் தவித்தனர். ஆனால் இந்த. எதிர்ப்புகளை தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும், நிரூபிக்கவும் ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான்.
கொள்கை பரப்பு செயலாளர் 
1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா. கட்சியில் ஏற்பட்ட புகைச்சலில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆரால் விடுவிக்கப்பட்டார். 1984 சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்க சென்றதால், ஜெயலலிதா,கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் . அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது.

அரசியல் வாரிசு 
1985 பிப்ரவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். ஜெயலலிதாவை மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர். ஆக்கினார். 1986ம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு வழங்கி "அரசியல் வாரிசு"தானே என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.
எம்.ஜி.ஆர் மரணம் 
உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறினால் 1987 டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த கண்ணீரோடு இருந்த ஜெயலலிதா எல்லோராலும் கவனிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவமும் அப்போது நடந்தது. அதனால் அனுதாபமும் பெற்றார். பிளவுபட்ட கட்சி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், அஇரண்டாகப் பிரிந்தது. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழ, அ.தி.மு.க.வில் பதவிச் சண்டை உருவானது ஜெயலலிதா கோஷ்டி, ஆர்.எம்.வீ. கோஷ்டி என்று கட்சி 2 ஆக பிளவு பட்டது. முடிவில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாள் முதல்வர் பொறுப்பு ஏற்றார்
எதிர்கட்சித்தலைவி 
1989ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாதான். 27 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். சட்டசபையில் எப்போதும் புயல்தான். 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவம் சட்டசபையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து போனது. தான் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. கலைந்த தலையும், கிழிந்த சேலையுமாக அவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வரான ஜெயலலிதா 1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேரத்ல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக முதல்வர் பதவியல் அமர்ந்தார் ஜெயலிதா.




சிறைவாழ்க்கை 
1991 முதல் 1996 வரை அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குதான் இவரை சிறைக்கும் அனுப்பி வைத்தது.

மீண்டு வந்த ஜெயலலிதா
1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதை 2006ல் பறி கொடுத்தார். ஆனாலும் 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. தான் பிறந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 2015ம் ஆண்டு சிறை தண்டனையிலிருந்தும், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்தும் மீண்டு வந்தார் ஜெயலலிதா.

புதிய வரலாறு...
2016 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 1984ம் ஆண்டுக்குப் பிறகு மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை தக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதை இதிலும் நிரூபித்தார்.

மருத்துவமனையில் இதனிடையே செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பின்னர் இன்று காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா தவிர்க்க முடியாத சக்தி என்பதில் சந்தேகமில்லை.


Tuesday, December 06, 2016

புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் அதே இடத்தில்!!!

புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் அதே இடத்தில்!!!