Monday, December 12, 2016

பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்!!!!!

இலவசங்களாலும் அதிரடி சலுகைகளாலும் இந்திய தொலைத்தொடர்பு சந்தையை ஒரு கலக்கு கலக்கிய கையேடு சம்பீத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ அதன் இலவச சலுகைகளை ஹேப்பி நியூ இயர் சலுகை என்ற பெயரில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்து வாடிக்கையாளர்களின் வயிற்றில் பாலை வாற்றார் மறுபக்கம் போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். அதே கையோடு ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை சார்ந்த தகவலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சார்ந்த எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் கூட ஜியோ டிடிஎச் சேவைகள் விரைவில் சந்தைக்குள் நுழைவது உறுதியாகிவிட்ட பட்சத்தில் இப்போதே டிஷ்டிவி, டாடாஸ்கை, ஏர்டெல் டிடிஎச் மற்றும் ஆக்ட் பைபர்நெட் போன்ற டிடிஎச் சேவை வழங்குநர்கள் முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து தூக்கம் தொலைக்க ஆரம்பித்து விட்டனர். அது சரி முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும்..?? ஜியோ டிடிஎச் சேவையால் என்ன கொண்டு வர முடியும்.?

டிசம்பர் 15 அன்று எங்களின் முந்தைய அறிக்கைப்படி மற்றும் பிற ஊடக வதந்திகளின் படி, ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 15 அன்று அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாக அதன் டிடிஎச் சேவையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இப்போது வரையிலாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை)

ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் அதுமட்டுமின்றி நிறுவனத்தின் டிடிஎச் சேவையானது மற்ற டிடிஎச் சேவை வழங்குநர்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் செட்-டாப் பாக்ஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வதந்தி நிலவுகிறது. உடன் ஜியோ செட் டாப் பாக்ஸ்கள் கூகிள் ப்ளே உடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆக அதில் ப்ரீ இன்ஸ்டால்ட்டு ஆப்ஸ்கள் மற்றும் கேம்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அனைத்திற்கும் மேலாகஜியோ டிடிஎச் சேவையானது 300+ சேனல்கள் வரை வழங்குமாம்.

வெளியாகும் முன்பே விளைவுகள் வெளியாகப்போகும் ஜியோ டிடிஎச் சேவையை மனதில் கொண்டு கிராமப்புற இந்தியா உட்பட நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செல்லும் பொருட்டு பிராந்திய மொழி உள்ளடக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தும் டிஷ்டிவி சமீபத்தில் அதன் பயனர்களுக்கு பல புதிய எச்டி பிராந்திய சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடவடிக்கை அதுமட்டுமின்றி, இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டிடிஎச் சேவை வழங்குநர் ஆக விளங்கும் வீடியோகான் டி2எச் உடன் டிஷ்டிவி இணைந்துள்ளது. இங்கே கேள்வி என்னெவென்றால் இந்த நடவடிக்கை சந்தையில் எடுக்க காரணம் வரவிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை தாக்குவதற்க்கா.? என்பது தான்.

ஏர்டெல் என்ன செய்கிறது.? ஏர்டெல் டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் துறையில் பெரிய சவாலாக வளர்ந்து நிற்கிறது. இந்நிறுவம் சமீபத்தில் அதன் 21 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மற்ற டிடிஎச் வழங்குநர்களுடன் ஏற்கனவே ஒரு கடுமையான போட்டியில் இருக்கும் ஏர்டெல், அடுத்து புதிதாக களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைக்கு ஈடு கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பிடும்போது ஏர்டெல் சேவையில் ஈடுகொடுத்தாலும் மிக கட்டண அளவீடுகளை கொண்டுள்ளதால், ஜியோ எளிமையாக ஏர்டெல் சேவையை பின்தள்ளும் என்றும் வதந்திகள் படி, ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது ஜியோவின் சேவை கட்டண அளவீடுகள் பாதி தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டாடாஸ்கை நிலை என்ன.? ஜியோவை ஏர்டெல் சமாளிக்கும் என்ற நம்பிக்கை ஒருபக்கமிருக்க, டாடாஸ்கை - நாட்டின் சிறந்த சேவை வழங்குநர்களில் ஒன்றாக இருந்து வருகிறது மற்றும் மற்ற டிடிஎச் வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில் டாடாஸ்கை 65 பிரத்தியேக சேனல்களை அளிகப்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஜியோ டிடிஎச் சேவைக்கு எதிர்பாராத ஒரு போட்டியை டாடாஸ்கை எதிர் நிற்கலாம்.


0 comments:

Post a Comment