Tuesday, December 08, 2015

சென்னை வெள்ளம்: உ.பி. முதல்வர் ரூ.25 கோடி நிதியுதவி


அகிலேஷ் யாதவ் | கோப்புப் படம்.

சென்னை வெள்ள நிவாரணப் பணிக்காக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.25 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங் களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கர்நாடகம், பிஹார், ஒடிஸா மாநில அரசுகள் தலா ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கி உள்ளன.
இந்த வரிசையில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.25 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளார். 
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், சென்னையில் மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் ரூ.25 கோடி வழங்கப்படும். வெள்ளத்தை சமாளிக்க போராடிய ராணுவத் தினர், தன்னார்வலர்களை பாராட்டு கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் ரூ.1 கோடி உதவி
இந்தி நடிகர் ஷாருக்கான் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல் வருக்கு ஷாருக்கான் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நேரிட்ட இயற்கை பேரழிவால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனினும் இந்த நேரத்தில் மக்களின் மனிதாபிமானம் என்னை பெருமையடையச் செய்கிறது. எங்களது நிவாரண உதவியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Courtesy : The Tamil Hindu

0 comments:

Post a Comment