Tuesday, December 08, 2015

நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து 11.12.2015 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட கால அவகாசம் நீட்டிப்பு | நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் 16.11.2015 முதல் 27.11.2015 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர் மழை
காரணமாக 28.11.2015 முதல் 04.12.2015 வரை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது இருப்பினும், அத்தேதிகளிலும் பெரும்மழை காரணமாக தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலையில் தனித்தேர்வர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து 11.12.2015 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின்  மூலமாக மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று சேவை மையங்களின்விவரத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Courtesy: Kalvisolai

0 comments:

Post a Comment