#

#

#

#

#

#

#

#

#

#

Thursday, April 23, 2020

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள்- வ்ங்கிக்கணக்கு விவரங்கள் அளித்து கொரோனா நிவாரண நிதி பெற படிவம்.

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள்- வ்ங்கிக்கணக்கு விவரங்கள் அளித்து கொரோனா நிவாரண நிதி பெற படிவம்.கீழே உள்ள இணைப்பு மூலம் படிவம் பூர்த்தி செய்து பயன் பெறலாம்.

BANK ACCOUNT DETAILS (SOCIAL SECURITY SCHEME)




அன்பும் அறிவும்| Arivum Anbum Official Video Dr Kamal Haasan Ghib...



கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இது ஒரு பெரும் பாதிப்பாகவும், அச்சமாகவும், சவாலாகவும் உள்ளது. இதனால் வீட்டில் அடங்கியிருக்கும் மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், பாஸிட்டிவிட்டியை கூட்டவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த பாடலை ஜிப்ரான் இசையமைக்க கமலுடன் இணைந்து அனிருத், யுவன் ஷங்கர்ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் இன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, தன்னை தானே தனிமை படுத்தி கொண்டும்... கொரோனா எதிர்ப்பு பணிகள் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வரும் இவரின் புது முயற்சியாக ' அறிவும் அன்பும்' என்கிற பாடல் உருவாகியுள்ளது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையை எடுத்து கூறும் வகையில் இந்த பாடலை, பாடியும் இயக்கியும், உள்ளார் கமல்ஹாசன். இப்பாடலை மேலும் சிறப்பாகும் விதமாக, திரையுலகை சேர்ந்த  பல கலைஞர்கள்  இந்த பாடலை கமலுடன் சேர்ந்து பாடியுள்ளனர்.
அந்த வகையில், இந்த பாடலை... அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ , சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், மற்றும் பிக்பாஸ் முகேன் ஆகியோர் ஒன்று செய்து இந்த பாடலை கமலுடன் பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையமைத்துள்ளார். மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த பாடல் இன்று (ஏப்ரல் 23 ஆம் தேதி), காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் கமலஹாசன் தரப்பில் இருந்து போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது.

கமலின் அறிவும் அன்பும் பாடல் உருவானது எப்படி?: இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டி
கரோனா விழிப்புணர்வுக்காக கமல் எழுதிய பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டியளித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 19,900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா விழிப்புணர்வு தொடர்பாக குறும்படம், பாடல்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் திரையுலகப் பிரபலங்கள். இந்நிலையில் கரோனா விழிப்புணர்வுக்காக கமல் ஹாசன் பாடல் ஒன்றை எழுதி இயக்கியுள்ளார்.

பொருளாதாரம், நவீன வாழ்க்கையைத் தாண்டி அழியாத உண்மையாக அறிவும் அன்பும் மட்டுமே உள்ளது. இதன்மூலம் இன்னல்களைக் கடக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் வகையில் அறிவும் அன்பும் பாடலை எழுதியுள்ளேன் என்று கமல் கூறியுள்ளார்.

திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள அறிவும் அன்பும் என்கிற இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஷங்கர் மகாதேவன், ஷ்ருதி ஹாசன், மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்தார்த், முகென், சித் ஸ்ரீராம் போன்றோர் இணைந்து கமல் எழுதிய பாடலைப் பாடியுள்ளார்கள். ஜூம் செயலி மூலம் கமலும் ஜிப்ரானும் இணைந்து இப்பாடலை இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டார்கள். மற்ற பாடகர்கள் தங்கள் வீட்டில் இருந்தே இப்பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்கள்.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது:

ஊரடங்கு காலம் குறித்து பாடல் ஒன்றை உருவாக்கலாம் என ஓர் உரையாடலில் கமல் சார் என்னிடம் சொன்னார். முதலில் அவர் பாடலை எழுதினார். அதற்கு நான் ட்யூனை அமைக்க ஆரம்பித்தேன். ஆனால் எவ்விதக் கட்டுப்பாடுகளும் எனக்கு இருக்கக்கூடாது என முதலில் ட்யூனை அமைக்கச் சொன்னார். ட்யூனைக் கேட்டு இரு நாள்கள் கேட்டார். ஆனால் மூன்றே மணி நேரத்தில் பாடல் வரிகளை எனக்கு அனுப்பினார். மூன்றாம் உலகப் போர் போன்ற சூழலில் உள்ளோம் என அனைவருக்கும் தெரியும். உலகம் இனி முன்பு போல இருக்காது. கரோனாவுக்கு முன்பு, பின்பு என உலகை மதிப்பிடுவோம். 

அன்பு தான் இந்தப் பாடலின் பிரதானம்.

இப்பாடலுக்காக 12 பாடகர்களைத் தாண்டி கோரஸ் பாடர்களையும் பயன்படுத்த நினைத்தோம். ஆனால் ஊரடங்குச் சமயத்தில் இதை எப்படி அணுகுவது எனத் தெரியவில்லை. வீட்டில் ரெக்கார்டிங் வசதிகள் கொண்டவர்கள் இதற்காக விண்ணப்பிக்க இணையம் வழியாக வேண்டுகோள் விடுத்தோம். நூற்றுக்கணக்கானவர்கள் அணுகினார்கள். அவர்களிலிருந்து 37 பேரைத் தேர்வு செய்தோம். அவர்களும் விடியோவில் இடம்பெற்றுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

Monday, April 20, 2020

Sunday, April 19, 2020

பி.எட்- இரண்டாம் ஆண்டு- தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்திய வினாத்தாள் (2019 ஆம் ஆண்டு).


பி.எட் -மாணவர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்திய வினாத்தாள் (2019 ஆம் ஆண்டு)  

Click to Download B.Ed. II Year Major Question Papers 2019


கீழ்கானும் லிங்க் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கிலம் வடிவில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் பாட குறிப்புகளை ( Study Material) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTEU - B.Ed., Study Material Click Here


உள்ளே போ புள்ளீங்கோ உள்ளே போ- Corona Awarness Song by Taj Noor | கொரோனா ...



உள்ளே போ புள்ளீங்கோ உள்ளே போ- Corona Awarness Song by Taj Noor | கொரோனா விழிப்புணர்வு பாடல்

PF- ல் முன்பணம் (COVID-19) எடுக்க புதிய வழிமுறை I New method | PF Advance Withdraw...


COVID-19 - PF- ல் முன்பணம் எடுக்க புதிய வழிமுறை 

Tuesday, April 14, 2020

Saturday, April 11, 2020

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை- வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை!


தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை

https://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. 


இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோரும் மாணாக்கர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Thursday, April 09, 2020

மழைக்கால கவிதைகள்- அருமையான படைப்பு!!!

வானவில்
வானமங்கைக்கு
இயற்கை
அணிவிக்கும்
வண்ண அட்டிகை!


புயல்
சாது
மிரண்டால்
காடு கொள்ளாது!
தென்றல்
மிரண்டால்
நாடு தாங்காது!

இடிச் சத்தம்
முகில்கள்
நடத்தும்
மல்யுத்தம்!


கதிரவன்
இருளை
விரட்டுவான்
ஆனால்
இரவுக்கு அஞ்சுவான்!


வெயில்
குளிருக்கு
இயற்கை தந்த
கம்பளிப் போர்வை!

மழை
உலகிலேயே
மிக உயரத்தில்
இருந்து கொட்டும்
அருவி!

நட்சத்திரங்கள்
பகலிலே
அடங்கி இரவிலே
வெளிவரும்
விண்வெளி ஆந்தைகள்!

முழுநிலவு
யாராலும்
எட்டி உதைத்து
ஆடமுடியாத
கால்பந்து!

ஆகாயம்
இயற்கை
ஓவியம் தீட்டும்
சுவர்!

கடல்
ஆகாயம்
முகம் பார்க்கும்
கண்ணாடி
கவிதை தொகுப்பு
த.ஹேமாவதி
கோளூர்

Friday, January 03, 2020

தமிழ்நாடு காவல்துறை காவலன் - எஸ்ஓஎஸ் (Tamil Nadu Police - Kavalan SOS App)


தமிழக மாநில காவல்துறை மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, காவலன் எஸ்ஓஎஸ் ஆப், மாநில மக்களுக்கு கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது, இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் உடனடியாக போலிஸ் உதவியை நாட தமிழக மக்கள் பயன்படுத்தலாம் உடல் அவசரநிலைகள், ஈவ் கிண்டல், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகள்

காவலன் சோஸ் பயன்பாடு யாருக்கு?
தமிழ்நாட்டின் குடிமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்கள் பாதிக்கப்படக்கூடிய அல்லது அச்சுறுத்தலாக உணரும்போதெல்லாம் காவலன் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம், இதனால் காவல்துறையினரின் உதவி அவர்கள் எங்கிருந்தாலும் விரைவாக அவர்களை அடைய முடியும். இயற்கை பேரழிவுகள் போன்ற அவசர காலங்களில் மக்கள் இந்த சேவையின் மூலம் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம். பெயரில்லாத புகார்களை உடனடியாக சரிபார்க்க முடியும், விலையில் நேரத்தையும் வளத்தையும் மிச்சப்படுத்துகிறது

“காவலன் சோஸ்” பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது?
தமிழ்நாடு காவல் துறையின் அதிகாரப்பூர்வ பயன்பாடு "காவலன் எஸ்ஓஎஸ்" ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கு கிடைக்கிறது.

நிறுவிய பின், உங்கள் தனிப்பட்ட மொபைல் எண், வீட்டு முகவரி மற்றும் பதிவு செய்ய மாற்று மொபைல் எண்ணை வழங்கவும்.

பதிவுசெய்தல், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் நகரம் போன்ற கட்டாய விவரங்களை வழங்கவும்.

எந்தவொரு இரு உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் தொடர்பு விவரங்களை அவசர தொடர்புகள் ஒரே நகரத்தில் வசிப்பதாக வழங்கவும். மொபைல் எண், பெயர் மற்றும் உறவு போன்ற விவரங்கள் கட்டாயமாகும். கூடுதலாக, நீங்கள் மூன்றாவது தொடர்பு நபரை அவசரகால தொடர்பாக சேர்க்கலாம்.

பதிவுசெய்தலை முடிக்க உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் செயல்படுத்தும் குறியீட்டைப் பெறுவீர்கள்.

உங்கள் செயல்படுத்தும் குறியீட்டை உள்ளிடவும், உங்கள் உள்நுழைவு செயல்முறை முடிந்தது. கவலான் முகப்புத் திரை இதை இடுகையிடும்.

அவசரகாலத்தின் போது, ​​முகப்பு பக்கத்தில் உள்ள SOS பொத்தானை அழுத்தினால் 5 வினாடி கவுண்டன் தொடங்குகிறது.

5 விநாடிகளுக்குப் பிறகு, உங்கள் தற்போதைய கேமராவிலிருந்து வீடியோவுடன் கவாலன் குழுவுக்கு உங்கள் தற்போதைய இருப்பிடத்தை பயன்பாடு தானாக வரைபடத்தில் அனுப்புகிறது. ஒரு நிமிடத்திற்குள், குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

அதேசமயம், உங்கள் இருப்பிடம் உங்கள் முன்பதிவு செய்யப்பட்ட “அவசர தொடர்புகளுக்கு” ​​ஒரு எஸ்எம்எஸ் எச்சரிக்கையாக அனுப்பப்படும்.

கூகுள் பிளே ஸ்டோர் லிங்க்:-


நன்றி:-
காவலன் - எஸ்ஓஎஸ் தொழில்நுட்ப சேவைகள், 
தமிழ்நாடு காவல்துறை, 
சென்னை -4 ஆல் இயக்கப்படுகிறது.

Wednesday, January 01, 2020

ஆங்கிலப் புத்தாண்டு எப்படி வந்தது தெரியுமா?- சுவாரசிய வரலாற்று தகவல்!!!

உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினம் ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்கின்றனர்.
happy new year 2020க்கான பட முடிவுகள்"
உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்திய நேரப்படி, டிச. 31-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அங்கே புத்தாண்டு பிறந்துவிடுகிறது. அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் மாலை 6.30 மணியளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
பட்டாசுகளை வெடித்தும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இனிப்புகளைப் பரிமாறியும் பூக்களை வழங்கியும் புத்தாண்டு தருணங்கள் நினைவில் இருத்தப்படுகின்றன.
உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது.
புத்தாண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் அப்போது ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச்சில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.
ஜூலியன் காலண்டர்
புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர். புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
எனினும் யேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25-ம் தேதியைக் கொண்டாடத் தொடங்கினர்.
கிரிகோரியன் காலண்டர்
குழப்பம் நீடித்த நிலையில் கடைசியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று நாம் பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகிறோம்.

புத்தாண்டு சபதம்
இது இன்றோ, நேற்றோ தொடங்கியதில்லை. புத்தாண்டு சபதம் மேற்கொள்வது ஆதிகாலத்தில் இருந்தே வழக்கமாக இருந்திருக்கிறது. பாபிலோனியர்கள் புத்தாண்டில் பழைய கடன்களை அடைப்போம் என்றும் கடன் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருவோம் என்றும் உறுதி பூண்டனர்.

நாமும் எத்தனையோ சபதங்களை ஏற்றிருப்போம், சில நாட்கள் முயற்சித்து கைவிட்டும் இருப்போம். இந்தப் புத்தாண்டில் இருந்தாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவோம். முடியவில்லையா? எந்த சபதமும் செய்ய மாட்டேன் என்றாவது சபதம் எடுப்போம்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 நன்றி:-

UGC - NET DECEMBER 2019- தேர்வு முடிவு வெளியீடு.

UGC - NET DECEMBER 2019- தேர்வு முடிவு வெளியீடு.