Thursday, April 23, 2020

அன்பும் அறிவும்| Arivum Anbum Official Video Dr Kamal Haasan Ghib...



கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இது ஒரு பெரும் பாதிப்பாகவும், அச்சமாகவும், சவாலாகவும் உள்ளது. இதனால் வீட்டில் அடங்கியிருக்கும் மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், பாஸிட்டிவிட்டியை கூட்டவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த பாடலை ஜிப்ரான் இசையமைக்க கமலுடன் இணைந்து அனிருத், யுவன் ஷங்கர்ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் இன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, தன்னை தானே தனிமை படுத்தி கொண்டும்... கொரோனா எதிர்ப்பு பணிகள் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வரும் இவரின் புது முயற்சியாக ' அறிவும் அன்பும்' என்கிற பாடல் உருவாகியுள்ளது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையை எடுத்து கூறும் வகையில் இந்த பாடலை, பாடியும் இயக்கியும், உள்ளார் கமல்ஹாசன். இப்பாடலை மேலும் சிறப்பாகும் விதமாக, திரையுலகை சேர்ந்த  பல கலைஞர்கள்  இந்த பாடலை கமலுடன் சேர்ந்து பாடியுள்ளனர்.
அந்த வகையில், இந்த பாடலை... அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ , சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், மற்றும் பிக்பாஸ் முகேன் ஆகியோர் ஒன்று செய்து இந்த பாடலை கமலுடன் பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையமைத்துள்ளார். மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த பாடல் இன்று (ஏப்ரல் 23 ஆம் தேதி), காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் கமலஹாசன் தரப்பில் இருந்து போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது.

கமலின் அறிவும் அன்பும் பாடல் உருவானது எப்படி?: இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டி
கரோனா விழிப்புணர்வுக்காக கமல் எழுதிய பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டியளித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 19,900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா விழிப்புணர்வு தொடர்பாக குறும்படம், பாடல்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் திரையுலகப் பிரபலங்கள். இந்நிலையில் கரோனா விழிப்புணர்வுக்காக கமல் ஹாசன் பாடல் ஒன்றை எழுதி இயக்கியுள்ளார்.

பொருளாதாரம், நவீன வாழ்க்கையைத் தாண்டி அழியாத உண்மையாக அறிவும் அன்பும் மட்டுமே உள்ளது. இதன்மூலம் இன்னல்களைக் கடக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் வகையில் அறிவும் அன்பும் பாடலை எழுதியுள்ளேன் என்று கமல் கூறியுள்ளார்.

திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள அறிவும் அன்பும் என்கிற இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஷங்கர் மகாதேவன், ஷ்ருதி ஹாசன், மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்தார்த், முகென், சித் ஸ்ரீராம் போன்றோர் இணைந்து கமல் எழுதிய பாடலைப் பாடியுள்ளார்கள். ஜூம் செயலி மூலம் கமலும் ஜிப்ரானும் இணைந்து இப்பாடலை இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டார்கள். மற்ற பாடகர்கள் தங்கள் வீட்டில் இருந்தே இப்பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்கள்.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது:

ஊரடங்கு காலம் குறித்து பாடல் ஒன்றை உருவாக்கலாம் என ஓர் உரையாடலில் கமல் சார் என்னிடம் சொன்னார். முதலில் அவர் பாடலை எழுதினார். அதற்கு நான் ட்யூனை அமைக்க ஆரம்பித்தேன். ஆனால் எவ்விதக் கட்டுப்பாடுகளும் எனக்கு இருக்கக்கூடாது என முதலில் ட்யூனை அமைக்கச் சொன்னார். ட்யூனைக் கேட்டு இரு நாள்கள் கேட்டார். ஆனால் மூன்றே மணி நேரத்தில் பாடல் வரிகளை எனக்கு அனுப்பினார். மூன்றாம் உலகப் போர் போன்ற சூழலில் உள்ளோம் என அனைவருக்கும் தெரியும். உலகம் இனி முன்பு போல இருக்காது. கரோனாவுக்கு முன்பு, பின்பு என உலகை மதிப்பிடுவோம். 

அன்பு தான் இந்தப் பாடலின் பிரதானம்.

இப்பாடலுக்காக 12 பாடகர்களைத் தாண்டி கோரஸ் பாடர்களையும் பயன்படுத்த நினைத்தோம். ஆனால் ஊரடங்குச் சமயத்தில் இதை எப்படி அணுகுவது எனத் தெரியவில்லை. வீட்டில் ரெக்கார்டிங் வசதிகள் கொண்டவர்கள் இதற்காக விண்ணப்பிக்க இணையம் வழியாக வேண்டுகோள் விடுத்தோம். நூற்றுக்கணக்கானவர்கள் அணுகினார்கள். அவர்களிலிருந்து 37 பேரைத் தேர்வு செய்தோம். அவர்களும் விடியோவில் இடம்பெற்றுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment