#

#

#

#

#

#

#

#

#

#

Friday, December 27, 2019

2019 வருடத்தின் மோசமான Password வெளியான பட்டியல், லிஸ்டில் நீங்க இருக்கீங்களா


நாம் பயன்படுத்தும் செல்போன், கம்ப்யூட்டர், இ மெயில், நெட்பேங்கிங் என எல்லாவற்றிக்கும் பாஸ்வோர்ட்களை நாம் விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். இதனால் மிக எளிதாக நம் நினைவுகளில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே நம்மில் பலரும் விரும்புவோம்.

நமக்கு எளிதாக நினைவில் நிற்கும் நம் பாஸ்வோர்ட்கள், ஹேக்கர்ஸ் எனப்படும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் நமது பாஸ்வோர்ட்களை ஹேக் செய்து திருட்டு வேலைகளில் ஈடுபட நம் அதைவிட மிக எளிதாக அனுமதிக்கிறோம் என்பதே உண்மை.
சர்வதேச அளவில் 2019 ஆம் ஆண்டில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட எளிதாக கண்டுபிடிக்க கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை, worst passwords of 2019 என்ற பெயரில் Splash Data என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வோர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. டாப் 10ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.

Splash Data என்ற நிறுவனம் வெளியிட்ட worst passwords of 2019 பட்டியல் விவரம் பின்வருமாறு:

மோசமான பாஸ்வோர்ட்கள் பட்டியலில் வழக்கம் போல இந்த ஆண்டும் 123456, 123456789, qwerty, மற்றும் password ஆகிய பாஸ்வோர்ட்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் நான்காம் இடத்தில் உள்ள password, கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்தது.

1. 123456

2. 123456789

3. qwerty

4. password

5. 1234567

6. 12345678

7. 12345

8. iloveyou

9. 111111

10. 123123

2020 வருடம் பிறப்பதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் நீங்கள் ஒரு புத்தாண்டு தீர்மானத்தை எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் என உங்கள் பாஸ்வோர்ட்களை மேம்படுத்த சபதம் செய்யுங்கள். அதன்படி உங்கள் இ மெயில், நெட்பேங்கிங் மின்னஞ்சல், வங்கி ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டுகள் சமூகவலைத்தள கணக்குகள் போன்ற உங்கள் முக்கியமான கணக்குகளுக்கு குறைந்தபட்சம் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வோர்ட்களை உருவாக்கி கொள்வது அவசியம்.

Sunday, December 22, 2019

Avarum Naanum : அரசியலிலும் வாழ்க்கையிலும் துணை இவர்தான்: பொன்முடி..



அரசியலிலும் வாழ்க்கையிலும் துணை இவர்தான்: பொன்முடி..

Courtesy: Puthiyathalaimurai Tv
https://www.youtube.com/watch?v=rklYe8BT3xg&t=29s

Friday, March 08, 2019

சர்வதேச மகளிர் தினம். (International Women's Day) - சிறப்பு கட்டுரை!!!

1908-ல் நியூயார்க்கில் பணிச்சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது. முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் பிப்-28, 1909 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
தொடர்புடைய படம்

1910 ஆம் ஆண்டு பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர். 
இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது,எனினும், தேதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதன் விளைவாக, உலக மகளிர் தினம் 1911, மார்ச்-19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். 
அதில் வாக்குரிமையோடு, பணிபுரிவதற்கான உரிமையும், வேலையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
1914-ல் முதல் உலகப் போர் மூண்டது. அமைதி நடவடிக்கையாக ரஷ்யப் பெண்கள், தங்களின் முதல் பெண்கள் தினத்தை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். போருக்கு எதிராகவோ, ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவோ அதே வருடத்தில் மார்ச்-08 வாக்கில் ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர்.


1917-ல் மற்றுமொரு புரட்சி தோன்றியது. முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போரால் ஏராளமான ரஷ்ய வீரர்கள் செத்து மடிந்தனர். அனைவரும் வாழ வழியின்றிப் பட்டினியால் அவதிப்பட்டனர். பொறுக்கமுடியாமல் ரஷ்யப்பெண்கள் பொங்கி எழுந்தனர். பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தபட்டது. (கிரிகோரியன் காலண்டரில் மார்ச்- 08).இதைத்தொடர்ந்து ரஷ்யப் புரட்சி வெடித்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது.

1975-ல் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதாகக் கூறப்படும் மார்ச்-08 சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. நூற்றாண்டுக்கு முன்பே போராளிகளாய் இருந்த பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது?

மகப்பேறு விடுமுறை
உலகம் முழுவதும் 63 நாடுகள் மட்டுமே மகப்பேறு விடுமுறைக்கென வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை  அளிக்கின்றன. 28% பெண்கள் மட்டுமே சம்பளத்தோடு கூடிய விடுமுறையை அனுபவிக்கின்றனர். 
ஊதியமில்லாப் பணி 
ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்தபட்சம் இரண்டரை மடங்காவது அதிகமாகச் செய்கின்றனர்.

சம்பள பாகுபாடு
ஒரே மாதிரியான வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஆணுக்கு 100 சென்ட் ஊதியம் அளிக்கப்பட்டால், பெண்ணுக்கு 77 சென்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் 66% பணியைப் பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 10% மட்டுமே பெறுகின்றனர்.
பணிபுரியும் வயது விகிதம்
சராசரி பணிபுரியும் வயது விகிதம் ஆண்களுக்கு 76.1 ஆகவும், பெண்களுக்கு 49.6 ஆகவும் இருக்கிறது.

வேலையில்லாதவர் விகிதம்
சர்வதேச அளவில் 12.5% இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது இளைஞிகளுக்கு 13.9% ஆக இருக்கிறது.சர்வதேச அளவில் பணியில் பெண்கள் 61.5% பெண்கள் சேவைத்துறைகளில் பணிபுரிகின்றனர். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் விகிதம் 13.5. விவசாயத்தில் 25% பெண்கள் ஈடுபடுகின்றனர். பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு 23% பெண் சிஈஓக்கள், தலைமை அதிகாரிகள் வெறும் 4% மட்டுமே இருக்கின்றனர். 
முறைசாரா வேலைவாய்ப்பு
முறைசாரா வேலைவாய்ப்பின் கீழ் (வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், வேலை கிடைக்கும்போது செய்பவர்கள்) தெற்காசியாவில் 95% பெண்கள் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு, சட்டபூர்வ தடைகள் பாலின பாகுபாட்டுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன. 

மேலும் பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபை, 2030-க்குள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 

இதற்கென சில திட்டங்கள் :-ஐக்கிய நாடுகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி,
2030-ம் ஆண்டில், அனைத்து சிறுமிகளும் முழுவதும் சுதந்திரமாக இருக்க வேண்டும். தரமான மற்றும் சமத்துவக் கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.  பயனுள்ள கற்றலை அவர்கள் அனுபவிக்க வேண்டும். உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான இனப் பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் கடத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பிற வகை அத்துமீறல்கள் ஆகிய வன்முறைகளை ஒழிக்க வேண்டும். குழந்தைத் திருமணங்கள், கட்டாயத் திருமணம், பெண் உறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களை அகற்ற வேண்டும்.
இவை அனைத்தும் நிறைவேறும் பட்சத்தில் பெண்களின் நிலை இன்னும் பல படிகள் உயரும். வாழ்வு செழிக்கும்.
women's day 2019 in tamil க்கான பட முடிவு

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்..

Tuesday, March 05, 2019

கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!!

கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!!


உடலில் நிறைய ஃப்ரீ ராடிக்கல்ஸ் இருக்கும். இவை நமது செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டவையாகும். கத்தரி இத்தகைய ராடிக்கல்ஸ்களை தனது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலம் எதிர்த்து போராடுகிறது. இத்தகைய ராடிக்கல்ஸ்களிடமிருந்து நம்மை காத்து, எந்த வித நோயையும் அண்ட விடாமல் தடுக்கும் குணம் கத்தரியில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலத்திற்கு உள்ளது. இது தான் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.

ஆரோக்கியமான இதயம்
உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லதாய் இந்த காய் உள்ளது. தினசரி சிறிதளவு சாப்பிடுவது கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் வர விடாமல் தடுக்கப்படுகின்றன.
மூளையின் செயல் திறன்
கத்தரிக்காயில் உள்ள பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் நமது மூளை செயல் திறனை அதிகரிக்கின்றன. இது நமது செல்களின் மெம்பிரேன்களை பத்திரமாக காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.

அதிகமாக உள்ள இரும்புச்சத்தை குறைத்தல்
தினசரி கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் உள்ள அதிகமாக சேர்ந்துள்ள இரும்புச்சத்தை குறைக்க உதவுகிறது. பாலிசைத்தீமியா என்ற நோய் உள்ளவர்களுக்கு அதிகம் இரும்புச்சத்து இருக்கும். இவர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருககும்.

Friday, February 01, 2019

TNTEU- INFO.

The Government of Tamil Nadu enacted Act No.(33) of 2008 to provide for the establishment and incorporation of Teachers Education University in the State of Tamil Nadu for promoting excellence in teachers education. Further the Act came into effect from 1.7.2008 by a Gazette Notification issued in G.O.M.S.256, Higher Education (K2) Department, dated 25.6.2008.This University is unique in nature relatively to the other Universities since its assignment is to promote excellence in teacher education and produce dynamic and smart teachers for the benefit of the society and the nation at large.

Dr.S.Thangasamy, Professor & Director, Centre for Educational Research, Madurai Kamaraj University was appointed as the third Vice Chancellor of this University. Dr.N.Ravindranath Tagore, Associate Professor, Department of Tamil, Presidency College was appointed as the Registrar i/c, and third Controller of Examinations of this University.
The University has established the following six departments and appointed one Professor for each.
1. The Department of Pedagogical Sciences

2. The Department of Value Education
3. The Department of Educational Psychology
4. The Department of Educational Technology
5. The Department of Curriculum Planning and Evaluation
6. The Department of Educational Planning and Administration 


The basic necessity for all the educational institutions in the country is to have intelligent, dynamic, excellent and brilliant teachers to disseminate the knowledge in the field. Without them no educational institution can survive and excel in any field of knowledge. It is such a divine task and it is really proud that it has to monitor all 731 affiliated colleges of education including government, government-aided and self-financing colleges in whole of the Tamil Nadu State.

Wednesday, January 30, 2019

தனித்துப் போகிறான் மனிதன்!! தவிக்கப் போகிறான்..!!!

*தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!*


காலையில்  எழுப்பிட அப்பா
வேண்டாம் - *Alarm app* -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - *step counter* இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம்  - *zomato, swiggy app* இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - *Uber,OLA app* இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
*Google Map* இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - *Big Basket* இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
*Amazon , Flipkart app* இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
*What's up, facebook* இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - *Paytm app* இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
*Google* டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு..
*App* என்னும் *ஆப்பு*.!!

_உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க !_

_விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.!_

_சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!_

_விழித்தெழுந்து விடை கொடு..!_

*செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து நல்ல வலை பின்னுவோம்..!*
🗣🗣🗣
வருங்காலத்தை உணர்த்தும் / எச்சரிக்கும் / அறிவுறுத்தும் அருமையான பதிவு.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வர்.
💐💐💐💐💐💐💐💐💐💐

என்றும் அன்புடன் ...

_📖படித்ததில் பிடித்தது ..🙂_

Sunday, January 20, 2019

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க ஜன.24.2029 வரை அவகாசம்!!!

வேலைவாய்ப்பு அலுலகங்களில் விடுபட்டுப்போன பதிவுமூப்பை புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் ஜனவரி 24-ம் தேதி முடிவடைகிறது. இதுவரை 77 ஆயி ரம் பேர் பதிவை புதுப்பித்துள்ளதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி தெரிவித் தார். பள்ளி, கல்லூரிகளில் இறுதி படிப்பை முடிப்பவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்வது வழக்கம்.



பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலை படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி கல்வித்தகுதியை மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் (சென்னை மற்றும் மதுரை) பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு பதிவுசெய்யும் பதிவுதாரர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பதிவை புதுப்பித்துவர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியா ரிட்டி) நடப்பில் இருக்கும். இல்லா விட்டால் அது காலாவதியாகி விடும். இந்த நிலையில், கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட் டத்தில் பதிவுமூப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் பதிவை புதுப்பித்துக்கொள்ள கடந்த 25.10.2018 முதல் 24.1.2019 வரை 3 மாதங்கள் தமிழக அரசு கால அவகாசம் வழங்கியது.

இதை பயன்படுத்தி, பதிவுமூப்பு விடுபட்ட வர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணைய தளத்தை (https://tnvelaivaaippu.gov.in/Empower/) பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றும் பதிவை புதுப் பித்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி கூறியதாவது:- வழக்கமாக இத்தகைய சலுகை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அளிக்கப்படும். ஆனால், இந்த முறை தமிழக அரசு பதிவு தாரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2011 முதல் 2016 வரை 6 ஆண்டுகளுக்கு பதிவை புதுப்பித்துக்கொள்ள சலுகை அளித்துள்ளது. இதுவரையில் ஏறத் தாழ 77 ஆயிரம் பேர் விடுபட்டுப் போன தங்கள் பதிவை புதுப்பித் துள்ளனர். அவர்களில் 59 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும், எஞ்சிய 18 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் புதுப்பித்துள்ளனர்.

ஏற்கெனவே அரசு அறிவித்த படி, இதற்கான காலஅவகாசம் ஜனவரி 24-ம் தேதி நிறைவடை கிறது. எனவே, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் புதுப்பிக்க வேண் டிய பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் வரும் 24-ம் தேதிக் குள் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

படித்துமுடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்படும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வரு கிறோம். இதில், ஏராளமான தனி யார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப் படும் பணியாளர்களை தேர்வு செய்துகொள்கின்றன. ‘வேலை வாய்ப்பு வெள்ளி’ என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரையில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனியார் நிறுவ னங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களை வேலைவாய்ப் புக்கு உகந்தவர்களாக மாற்றும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் திறன் மேம்பாட்டு அலுவலர்களை நியமித்துள்ளோம். இவ்வாறு ஜோதிநிர்மலா சாமி தெரிவித்தார்.

Friday, January 11, 2019

சிகா கல்வியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழா கோலப்போட்டி- ஜனவரி 2019

சிகா கல்வியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழா கோலப்போட்டி