#

#

#

#

#

#

#

#

#

#

Friday, January 03, 2020

தமிழ்நாடு காவல்துறை காவலன் - எஸ்ஓஎஸ் (Tamil Nadu Police - Kavalan SOS App)


தமிழக மாநில காவல்துறை மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, காவலன் எஸ்ஓஎஸ் ஆப், மாநில மக்களுக்கு கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது, இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் உடனடியாக போலிஸ் உதவியை நாட தமிழக மக்கள் பயன்படுத்தலாம் உடல் அவசரநிலைகள், ஈவ் கிண்டல், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகள்

காவலன் சோஸ் பயன்பாடு யாருக்கு?
தமிழ்நாட்டின் குடிமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்கள் பாதிக்கப்படக்கூடிய அல்லது அச்சுறுத்தலாக உணரும்போதெல்லாம் காவலன் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம், இதனால் காவல்துறையினரின் உதவி அவர்கள் எங்கிருந்தாலும் விரைவாக அவர்களை அடைய முடியும். இயற்கை பேரழிவுகள் போன்ற அவசர காலங்களில் மக்கள் இந்த சேவையின் மூலம் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம். பெயரில்லாத புகார்களை உடனடியாக சரிபார்க்க முடியும், விலையில் நேரத்தையும் வளத்தையும் மிச்சப்படுத்துகிறது

“காவலன் சோஸ்” பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது?
தமிழ்நாடு காவல் துறையின் அதிகாரப்பூர்வ பயன்பாடு "காவலன் எஸ்ஓஎஸ்" ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கு கிடைக்கிறது.

நிறுவிய பின், உங்கள் தனிப்பட்ட மொபைல் எண், வீட்டு முகவரி மற்றும் பதிவு செய்ய மாற்று மொபைல் எண்ணை வழங்கவும்.

பதிவுசெய்தல், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் நகரம் போன்ற கட்டாய விவரங்களை வழங்கவும்.

எந்தவொரு இரு உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் தொடர்பு விவரங்களை அவசர தொடர்புகள் ஒரே நகரத்தில் வசிப்பதாக வழங்கவும். மொபைல் எண், பெயர் மற்றும் உறவு போன்ற விவரங்கள் கட்டாயமாகும். கூடுதலாக, நீங்கள் மூன்றாவது தொடர்பு நபரை அவசரகால தொடர்பாக சேர்க்கலாம்.

பதிவுசெய்தலை முடிக்க உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் செயல்படுத்தும் குறியீட்டைப் பெறுவீர்கள்.

உங்கள் செயல்படுத்தும் குறியீட்டை உள்ளிடவும், உங்கள் உள்நுழைவு செயல்முறை முடிந்தது. கவலான் முகப்புத் திரை இதை இடுகையிடும்.

அவசரகாலத்தின் போது, ​​முகப்பு பக்கத்தில் உள்ள SOS பொத்தானை அழுத்தினால் 5 வினாடி கவுண்டன் தொடங்குகிறது.

5 விநாடிகளுக்குப் பிறகு, உங்கள் தற்போதைய கேமராவிலிருந்து வீடியோவுடன் கவாலன் குழுவுக்கு உங்கள் தற்போதைய இருப்பிடத்தை பயன்பாடு தானாக வரைபடத்தில் அனுப்புகிறது. ஒரு நிமிடத்திற்குள், குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

அதேசமயம், உங்கள் இருப்பிடம் உங்கள் முன்பதிவு செய்யப்பட்ட “அவசர தொடர்புகளுக்கு” ​​ஒரு எஸ்எம்எஸ் எச்சரிக்கையாக அனுப்பப்படும்.

கூகுள் பிளே ஸ்டோர் லிங்க்:-


நன்றி:-
காவலன் - எஸ்ஓஎஸ் தொழில்நுட்ப சேவைகள், 
தமிழ்நாடு காவல்துறை, 
சென்னை -4 ஆல் இயக்கப்படுகிறது.

Wednesday, January 01, 2020

ஆங்கிலப் புத்தாண்டு எப்படி வந்தது தெரியுமா?- சுவாரசிய வரலாற்று தகவல்!!!

உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினம் ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்கின்றனர்.
happy new year 2020க்கான பட முடிவுகள்"
உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்திய நேரப்படி, டிச. 31-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அங்கே புத்தாண்டு பிறந்துவிடுகிறது. அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் மாலை 6.30 மணியளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
பட்டாசுகளை வெடித்தும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இனிப்புகளைப் பரிமாறியும் பூக்களை வழங்கியும் புத்தாண்டு தருணங்கள் நினைவில் இருத்தப்படுகின்றன.
உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது.
புத்தாண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் அப்போது ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச்சில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.
ஜூலியன் காலண்டர்
புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர். புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
எனினும் யேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25-ம் தேதியைக் கொண்டாடத் தொடங்கினர்.
கிரிகோரியன் காலண்டர்
குழப்பம் நீடித்த நிலையில் கடைசியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று நாம் பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகிறோம்.

புத்தாண்டு சபதம்
இது இன்றோ, நேற்றோ தொடங்கியதில்லை. புத்தாண்டு சபதம் மேற்கொள்வது ஆதிகாலத்தில் இருந்தே வழக்கமாக இருந்திருக்கிறது. பாபிலோனியர்கள் புத்தாண்டில் பழைய கடன்களை அடைப்போம் என்றும் கடன் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருவோம் என்றும் உறுதி பூண்டனர்.

நாமும் எத்தனையோ சபதங்களை ஏற்றிருப்போம், சில நாட்கள் முயற்சித்து கைவிட்டும் இருப்போம். இந்தப் புத்தாண்டில் இருந்தாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவோம். முடியவில்லையா? எந்த சபதமும் செய்ய மாட்டேன் என்றாவது சபதம் எடுப்போம்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 நன்றி:-

UGC - NET DECEMBER 2019- தேர்வு முடிவு வெளியீடு.

UGC - NET DECEMBER 2019- தேர்வு முடிவு வெளியீடு.