#

#

#

#

#

#

#

#

#

#

Tuesday, June 23, 2015

2005-க்கு முன்பான ரூபாய் நோட்டுகளை வரும் 30-க்குள் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

கடந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், வரும் 30-ம் தேதிக்குள் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் என வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தையும் கருப்புப் பணத்தையும் தடுப்பதற் காக கடந்த ஆண்டு முக்கிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி, 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக் கப்பட்ட ரூ.500, ரூ.1,000 உள் ளிட்ட அனைத்து ரூபாய் நோட்டு களையும் செல்லாததாக அறிவித் தது. இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியது. அதற்கான காலக்கெடு, ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 
கோப்புப் படம்.
இந்நிலையில், வரும் 30-ம் தேதிக் குள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 2005-ம் ஆண்டுக்கு முன்பு வரை அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் மிகக் குறைவாக உள்ளன. இதனால், அதிகளவில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட் டன. இதைத் தடுப்பதற்காக, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அச்சடித்து வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் அதிகளவில் பாது காப்பு அம்சங்கள் இடம் பெற்றுள் ளன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, 2005-க்கு முன்பு அச்சிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ரூபாய் நோட்டுகளின் பின்புறத் தில் அது அச்சடிக்கப்பட்ட ஆண்டு விவரம் இடம் பெற்றிருக்கும். ஆனால், 2005-க்கு முன்பு வெளி யிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. இதை வைத்து அந்த ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கலாம்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
COURTESY: The Tamil Hindu