#

#

#

#

#

#

#

#

#

#

Tuesday, May 03, 2016

அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி!

எங்காவது அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்திருக்கிறதா? மதுரை மாவட்டம் யா.ஒத்தக் கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அந்த அதிசயம் நடந்திருக்கிறது.
மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப்பள்ளியான இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஏக தள்ளுமுள்ளு ஆகிப் போனதால், வரிசையில் நிற்க வைத்து, டோக்கன் கொடுத்து ஒலி பெருக்கியில் பெயர்களை அறிவித்து அட்மிஷன் நடத்தி இருக்கிறார்கள்.
தனியாரிலிருந்து மாறிய மாணவர்கள்
அப்படி என்ன மோகம் இந்தப் பள்ளியின் மீது? “2010-11-ல் நான் இங்கு வந்தபோது பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு மிக மோசமாக இருந்தது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சரி செய்தோம். மாணவர்கள் வருகை தானாகவே அதிகரித்தது. எங்கள் பள்ளியைச் சுற்றி 8 தனியார் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளிலிருந்து இந்த முறை 78 மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு மாறி இருக்கிறார்கள்” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன்.
குழந்தைகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் 8 ஆயிரம் சதுர அடியில் 10 லட்ச ரூபாய் செலவில் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்திருக்கிறார்கள். கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஆசிரியர்களே பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள். பொதுமக்களில் நூறு பேரைப் புரவலர்களாகச் சேர்த்து அவர்களிடம் தலைக்கு 1,000 ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். இதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு மின் கட்டணம், துப்புரவுப் பணியாளர் சம்பளம் உள்ளிட்டவற்றைச் சமாளித்துக் கொள்கிறார்கள்.
கணினி ஜாலம்
தனியார் பள்ளிகள் பிரம்மாண்டமாக முன்னிறுத்தும் ஸ்மார்ட் கணினி அறையையும் பொதுமக்களின் பங்களிப்போடு எளிமையாக இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள ஆறு கணிப்பொறிகளில் மாணவர்கள் தொழில்நுட்ப ஜாலங்கள் காட்டுகிறார்கள். இதற்கு முன்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, நமக்கு நாமே திட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிதியைக் கொண்டு 30 லட்ச ரூபாய் செலவில் அனைவருக்கும் நாற்காலிகள் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பள்ளி ஆண்டு விழாவை வழக்கமான சம்பிரதாயமாகக் கொண்டாடாமல் திறமைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
கதையின் அருமை
இந்த விழாவில் மாணவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் அத்தனை திறமைகளையும் வெளிக்கொணரக் களம் அமைத்துத் தருகிறார்கள். அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க மார்ச் 22-ம் தேதி கதை சொல்லல் தினமாகக் கொண்டாடினார்கள். அன்று தமிழகத்தின் முக்கியக் கதை சொல்லிகளை வரவழைத்துக் கதை சொல்லும் நிகழ்ச்சி அருமையாக அரங்கேறியது. இப்போது புரிகிறதா அட்மிஷனுக்கு ஏன் அடிதடி என்று?
“சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடுதான் இதை என்னால் சாதிக்க முடிந்தது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 158 பேரைச் சேர்த்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறது எங்கள் பள்ளி. இங்கிருந்து மேல் படிப்பிற்காக மற்றப் பள்ளிகளுக்குப் போன பிள்ளைகள் அங்கேயும் சாதிக்கிறார்கள். எங்கள் பள்ளிக்குக் கூக்கூ அமைப்பு 5 லட்சம் செலவில் நூலகம் அமைத்துத் தர சம்மதித்திருக்கிறது. அதேபோல் டி.வி.எஸ். நிறுவனத்தின் ஆரோக்கிய டிரஸ்ட் 9 லட்சத்தில் நவீனக் கழிப்பறை கட்டித் தருவதாகச் சொல்லி இருக்கிறது. படிப்படியாக இன்னும் கட்டமைப்பை மேம்படுத்தி இதை மாநிலத்திலேயே முதல் தரமான அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே லட்சியம்” என்கிறார் தென்னவன். 

நன்றி: தி தமிழ் இந்து

Monday, May 02, 2016

விழுப்புரம் (74) தொகுதி ஒரு பார்வை-2016

 விழுப்புரம்  (74) தொகுதி ஒரு பார்வை-2016
விழுப்புரம் தொகுதி 1952ம் ஆண்டு உருவானது. இத்தொகுதியில் விழுப்புரம் நகராட்சி, வளவனூர் பேரூராட்சி பில்லூர், காவணிப்பாக்கம் சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
இத்தொகுதியில்தான் புகழ்பெற்ற பூவரசன் குப்பம் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரமாகும். விழுப்புரத்தில் உள்ள கோலியனூரான் வாய்க்காலை தூர் வாராததால் மழைக்காலங்களில் விழுப்புரமே வெள்ளத்தில் மிதக்கும். தொடர்ந்து தீர்க்கப்படாத பிரச்சினை எனில் முக்கியமாக இதை குறிப்பிடலாம்.
இத்தொகுதியில் 7 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும்,தலா 1 முறை காங்கிரஸும் , சுயேட்சையும் வென்றுள்ளது. 4 முறை முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றார். தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் சி வி சண்முகம் எம் எல் ஏவாக உள்ளார்.
இத்தொகுதியில் 1,20, 863 ஆண்களும் 1,24, 205 பெண்களும், 42 திருநங்கைகளும் என மொத்தம் 2, 45, 110 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
விழுப்புரம் வட்டம் (பகுதி) அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மழவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் கிராமங்கள்.
விழுப்புரம் (நகராட்சி) மற்றும் வளவனூர் (பேரூராட்சி).

நன்றி: தி தமிழ் இந்து
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
1952
நாகராஜன்
சுயேச்சை
1957
சாரங்கபாணி கவுண்டர்
இந்திய தேசிய காங்கிரசுஸ்
1962
M.சண்முகம்
திமுக
1967
M.சண்முகம்
திமுக
1971
M.சண்முகம்
திமுக [6]
1977
பி.கிருஷ்ணன்
அதிமுக
1980
K. P.பழனியப்பன்
திமுக
1984
M.மணிராஜரத்தினம்
அதிமுக
1989
கே. பொன்முடி
திமுக
1991
D.ஜனார்த்தினம்
அதிமுக
1996
கே. பொன்முடி
திமுக
2001
கே. பொன்முடி
திமுக
2006
கே. பொன்முடி
திமுக
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K. பொன்முடி
தி.மு.க
72462
2
R. பசுபதி
அ.தி.மு.க
62714
3
D. துரைசாமி
தே.மு.தி.க
13621
4
V. வெற்றிசெல்வன்
சுயேச்சை
1523
5
V. சுகுமார்
பி.ஜே.பி
994
6
M. மொகமத் ஜாக்கிரியா
சுயேச்சை
845
7
V. வைகுந்தன்
பி.எஸ்.பி
804
8
V. ரவிச்சந்திரன்
சுயேச்சை
690
9
V. பிரகாசம்
சுயேச்சை
321
10
M. முகமத் அலி ஜின்னா
சுயேச்சை
221
11
D. இளந்திரையன்
சுயேச்சை
144
12
G. பழனி
சுயேச்சை
117
13
E. கலியமூர்த்தி
சுயேச்சை
75
14
K. சாதகோபன்
சுயேச்சை
69
154600
2011 - தேர்தல் ஒரு பார்வை
 
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
C.V. சண்முகம்
அ.தி.மு.க
90304
2
K. பொன்முடி
தி.மு.க
78207
3
C. அரோக்கியசாமி
பி.ஜே.பி
1100
4
K. சீனிவாசன்
சுயேச்சை
769
5
M. முகமது அலி ஜின்னா
சுயேச்சை
707
6
A. வேலு
புபா
679
7
S. பாஸ்கர்
சுயேச்சை
560
8
G. இனியதயாளன்
சுயேச்சை
317
9
V. சண்முகம்
சுயேச்சை
210
10
N. சண்முகம்
சுயேச்சை
124
11
K. சடகோபன்
சுயேச்சை
73
 
173050