ஆசிரியர் பணி: தவிப்பில் கணினி அறிவியல் பட்டதாரிகள்
மாணவர்கள் கணினி அறிவைப் பெறும் வகையில், மடிக்கணினியை வழங்கிய தமிழக அரசு, கணினி
வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல்இருப்பது ஏன்?
என்று கேள்வி எழுப்புகின்றனர் பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் கணினி
அறிவியல் பட்டதாரிகள். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட
போது, கணினி அறிவியல் பாடமும் அமல்படுத்தப்பட்டது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான
வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு படிப்பு கற்றுத்
தரப்பட்ட நிலையில், அதற்கு அடுத்தாண்டில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment