Sunday, February 04, 2018

யு -19 உலகக் கோப்பை வரலாற்று வெற்றி: சச்சின், சேவாக், கோலி வாழ்த்து

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
யு -19 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், ட்ராவிட்டுக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 
சச்சின்
சிறந்த கூட்டு முயற்சி. பெரிய கனவு நனவாகியுள்ளது. நமது உலக சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். ராகுல் டிராவிட் மற்றும் பரஸ் வழிகாட்டுதலுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சுரேஷ் ரெய்னா
உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடையாத அணியாக சிறந்த விளையாட்டை யு -19 அணி விளையாடியுள்ளது. உங்கள் பணி தற்போதுதான் ஆரம்பித்துள்ளது.  தொடர்ந்து அணியின் வெற்றிக்கு பின்னால் இருந்து உதவிய ராகுல் டிராவிடுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சேவாக்
ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்து புகழும் இந்த குழந்தைகளுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட டிராவிடுக்கே சேரும். அவரைப் போன்ற சிறந்த வீரர் உலகக் கோப்பையில் கை வைக்க தகுதியுடையவர்.
விராட் கோலி
என்னே ஒரு வெற்றி.. இதனை  முதற் படியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தருணத்தை கொண்டாடுங்கள். இன்னும் செல்ல நீண்ட தூரம் இருக்கிறது.
விவிஎஸ் லஷ்மன்
தொடர்ந்து யு -19 உலகப் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். அனைவரும் போட்டியின் தீவிரத்தை கடைசி வரை உணர்திருந்தனர். உண்மையாக மறக்கமுடியாத வெற்றி. இந்த நேரத்தை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
அனில் கும்ளே
வெற்றி பெற்ற இளம் அணிக்கு வாழ்த்துகள். எல்லா பிரிவுகளிலும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினீர்கள்.
அஷ்வின்
யு - 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடர் முழுவதும் அவர்களது விளையாட்டு  எதிர் அணிக்கு வெற்றியை தராத வண்ணம் இரக்கமற்றதாக இருந்தது. இந்திய அணி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்
முகமத் கைஃப்
என்ன சிறப்பான தருணம் இந்த வீரர்களுக்கு. அவர்களை நினைத்து பெருமையாக உள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அடைந்த வெற்றியை நினைவூட்டுகிறார்கள். இந்த வெற்றி ராகுல் டிராவிடின் பெரும் முயற்சி. இந்த வீரர்கள் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளார்கள்.

Courtesy; The Tamil Hindu.

0 comments:

Post a Comment