Tuesday, February 13, 2018

சிகா கல்வியியல் கல்லூரி மாணவர்கள்- மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் பண்பாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை

   தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 2017-18 ஆம் கல்வியாண்டில் சென்னையில் நடத்திய மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் பண்பாட்டுப் போட்டிகளில் சிகா கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவில் குண்டு எறிதல் போட்டியில் அ.பார்த்திபனும், இசை கருவிகள் வாசித்தலில் மு.அன்பரசனும் முதல் இடத்தை பெற்றனர்.


       விழுப்பும் மாவட்ட அளவில் குண்டு எறிதல் போட்டியில் அ.பார்த்திபன், இசை கருவிகள் வாசித்தலில் மு.அன்பரசன், பாட்டுப்போட்டியில் க.புருஷோத்தமன் ஆகியோர் முதல் இடத்தையும், பேச்சுப்போட்டியில் தா.சிந்து, கட்டுரைப்போட்டியில் ஜெ.வியோலா, நீளம் தாண்டுதல் போட்டியில் தி.கவிதா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இம்மாணவர்கள் அனைவரையும் சிகா கல்வி குழுமமும், சிகா கல்வியியல் கல்லூரி முதல்வரும், ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.




0 comments:

Post a Comment