ரியோ
டி ஜெனிரோ: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக
சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.பிரேசிலி்ல் நடைபெற்று வரும்
பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில்
இந்தியாவின் சார்பில் தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார். இதில் அவர்
தங்கப்பதக்கம் வென்றார். எப் 46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர்
தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில்
இந்தியா இரண்டாவதுதங்கம் பெற்றுள்ளது. ஏற்கனவே பாராலிம்பிக் போட்டியில்
தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுல் பிரிவில் தங்கம் வென்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.2004 பாராலிம்பிக்கில் 62.15மீ., தூாரம் எறிந்து தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக்கில் 63.97 மீ., தூரம் வீசி தனது உலக சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா
Wednesday, September 14, 2016
Home »
» பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு தங்கம்
0 comments:
Post a Comment