மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக சாதாரணமான வார்த்தைகள் அல்லது எண்களை பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்வது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்கள் தான் மிக மோசமான பாஸ்வேர்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு தான் 2018ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் Password என்ற சொல் அதிகமாக உள்ளது. மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்ததில் சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
thanks for sharing
ReplyDeletehave a nice day
sensor night lamp