Thursday, November 20, 2014

காஸ் சிலிண்டருக்கு நேரடி மானிய திட்டம்: ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அமல்



சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
முன்னதாக 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் நவம்பர் 15-ம் தேதி இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.
இதன்படி ஒரு வாடிக்கையாளர் காஸ் சிலிண்டர் பெற முன்பதிவு செய்தால், அரசு அவரது வங்கிக் கணக்கில் மானியத் தொகையான ரூ.568 செலுத்தும். வாடிக்கையாளர் வீட்டுக்கு காஸ் சிலிண்டர் வருவதற்கு முன்பாக அவரது கணக்கில் பணம் சேர்ந்துவிடும்.
இதன் பிறகு சந்தை விலையை கொடுத்து வாடிக்கையாளர் தங் களுக்கான காஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மட்டுமே அரசு மானியம் அளிக்கும். அதைவிட கூடுதலாக வாங் கினால் வாடிக்கையாளர்தான் முழு தொகையையும் செலுத்த வேண்டும்.
இப்போது ஆண்டுதோறும் சமையல் காஸுக்கான மானியமாக ரூ.48 ஆயிரம் கோடியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் அரசின் மானிய சுமை 15 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
காஸ் சிலிண்டர்களை வாங்கு வோர் இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் தேவையில்லை. வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் அளித்தால் போதுமானது.
இத்திட்டத்தில் இணையுமாறு பாரத் பெட்ரோலியம், இண்டியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோ லியம் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளன. இதற்காக வாடிக்கையாளர்களுக்கு தேவை யான உதவிகளை செய்யுமாறு காஸ் சிலிண்டர் முகவர்களை அந்நிறு வனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

0 comments:

Post a Comment