Thursday, November 20, 2014

யுஜிசி ‘நெட்' தகுதித்தேர்வு முடிவு வெளியீடு- ஜூன் மாதம் 29-ம் தேதி-2014


தேசிய அளவிலான கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு (நெட்) கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்டது.
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நடத்திய இந்த தேர்வின் முடிவு, www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வில் 21,249 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
“ஜெஆர்எஃப்” எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் தகுதிக்கு 3,682 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தேர்வு முடிவுகள் மற்றும் கட் ஆப் மதிப்பெண் தொடர்பான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் மாதம் முதல் யுஜிசி-க்குப் பதில் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்தான் (சிபிஎஸ்இ) நெட் தகுதித்தேர்வை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment