மாணவர்கள் பலனடையும் அளவில் 'இந்தியாவில் சிந்திப்போம்' என்ற திட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
நொய்தாவில் இன்று (வியாழக்கிழமை) இந்திய தொழில் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இது குறித்து கூறுகையில்,
"பிரதமர் நரேந்திர மோடி 'இந்தியாவில் உருவாக்குவோம்' என்ற திட்டத்தை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளார். இதனை முன் உதாரணமாக கொண்டு மனிதவள மேம்பாட்டுத்துறையால் 'இந்தியாவில் சிந்திப்போம்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
மாணவர்களின் திறனை ஊக்கப்படுத்தவும் அவர்களது புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவரவும் இந்த புதிய திட்டம் மிகப் பெரிய உதவியாக அமையும்.
இந்த திட்டத்துக்காக பல்வேறு தொழில் கூட்டமைப்புடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் மாணவர்களின் ஆய்வு செலவுகளுக்கு உதவிகள் கிடைக்க வழி அமைத்து தரப்படும். திறன் வாய்ந்த சிறந்த புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகளும் மாணவர்களை தேடி வரும். இதனால் மாணவர்களுக்கு அவர்களது அடுத்தக்கட்ட முயற்சிக்கான ஊக்கமும் பிறக்கும்" என்றார்.
0 comments:
Post a Comment