ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்டுகளை விநியோகிக்க சென்னையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கடந்த, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ என்னும், ‘வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கான ரூபே கார்டுகளை விநியோகிக்க சென்னையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 2-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், தொழிலாளர்கள் புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கவும் சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Courtesy: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/68471/aadhar-card-connect-with-bank-accounts-five-days-special-camp
Courtesy: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/68471/aadhar-card-connect-with-bank-accounts-five-days-special-camp
0 comments:
Post a Comment