இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகம், கி.பி. 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கி.பி.1882 முதல், தொல்லியல், மானிடவியல், ஓவியம் மற்றும் சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங்காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய துறைகளில் பல்வேறு புத்தகங்களையும் இதர பிரசுரங்களையும், அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்டுவருகிறது. அருங்காட்சியகங்கள் துறையின் வெளியீடுகள் உலகப்புகழ் பெற்றவையாகும். அருங்காட்சியக சேகரிப்புகளின் சுட்டுப்பொருட்கள் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளின் விளைவாக அப்பதிப்புகள் இருப்பதால், அவை இவ்வுலகிற்கே சான்றாதார நூல்களாக உள்ளன.
இதுவரை, 183 புத்தகங்கள் (24000 பக்கங்கள்) இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புத்தகங்களை பதிவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அப்புத்தகங்களை, தேடக்கூடிய பி.டி.எஃப் வடிவில், வாசகர்கள் எளிதாக அணுகி, படித்திட, இந்த வலைதளம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வலைதள முகவரி:
0 comments:
Post a Comment