மத்திய அரசின் அடுத்தடுத்த அதிரடிகளால் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்பவர்கள் மற்றும் தங்க நகை வாங்குவோர் கட்டாயம் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவையடுத்து பான் கார்டு பெற மனு செய்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மத்திய அரசின் நிறுவனங்களான யுடிஐ (UTI), என்எஸ்டிஎல் (NSDL) ஆகிய நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்து வருவதாக சென்னையில் உள்ள யுடிஐயின் தென் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பான் கர்டு பெற என்ன தகுதி வேண்டும்?:
பான் கார்டு பெற எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை அதே போல் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை எடுக்கலாம் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதே போல் தற்போது வரை நாட்டில் 25 கோடி பேரிடம் பான் கார்டு இருப்பதாகவும், அடுத்தாண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?:
பான் கார்டை, வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இருப்பிட மற்றும் புகைப்பட ஆவணங்களை கொடுத்து எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதே போல் தனி நபருக்கு புதிய கார்டு பெற ரூ.107 மட்டுமே கட்டணம் என்றும், அதிக கட்டணத்தை முகவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான்கார்டு வாங்கினாலே வருமானவரி கட்டவேண்டும் என்ற தவறான புரிதல் மக்களிடம் இருப்பதாகவும், இதற்கு அவசியமில்லை என்றும் வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது.
Courtesy: http://tv.puthiyathalaimurai.com
0 comments:
Post a Comment