தாராளமயமாக்கல் வந்தபிறகு பல நாடுகளுக்கும் உங்கள் தயாரிப்புகளை அனுப்புவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் வந்துவிட்டன. 1990-ம் ஆண்டிலிருந்தே இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், காப்புரிமை சட்ட மசோதா 1999-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.
உங்களது தயாரிப்புகளை நீங்கள் தயாரித்து விற்பனை செய்யலாம். உங்கள் பொருளுக்கு அதிக கிராக்கி நிலவும்போது அதை மற்றவரும் காப்பி செய்து தயாரிக்கலாம். இதனால் உங்களது உழைப்பு வீணாகும். லாபமும் குறையும். இதைத் தவிர்க்கத்தான் காப்புரிமை பெறுவது அவசியம். பொருளுக்கு மட்டுமின்றி வடிவமைப்புக்கும் (டிசைன்) காப்புரிமை பெறலாம்.
# காப்புரிமை அலுவலகம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
# காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கொல்கத்தாவி லும் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னையில் உள்ளன. இதனால் சென்னையிலேயே காப்புரிமை பெறலாம்.
# ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படும்.
# புதிதாக எந்த ஒரு தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள பொருள்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தால் அதற்கும் காப்புரிமை பெறலாம். கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயமாகும்
# நீங்கள் தயாரித்த பொருளுக்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறதா என்பதை இணையதளத்தில் தேடி தகவல்களைப் பெறலாம்.
# இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை குறித்த தகவல்கள் பற்றிய விவரத்தை ipindia@nic.in என்ற மின்னஞ்சல் மூலமும், சென்னை அலுவலகம் பற்றிய விவரத்தை chennai-patent@nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் பெறலாம். wipo என்ற இணையதள தேடுதல் மூலம் பிற நாடுகளில் எந்தெந்த பொருள்கள் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
# காப்புரிமை பெறுவதற்கு படிவம் -2 ஐ பூர்த்தி செய்ய வேண்டும். இது தவிர படிவம் -1 மற்றும் படிவம் -18-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
வெளிநாட்டுத் தயாரிப்புக்கு காப்புரிமை
ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் காப்புரிமைக்காக விண்ணப்பிக் கின்றனர். இவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டினர். தங்களது தயாரிப்பு களை இந்தியாவில் விற்பதற்காக இவர்கள் காப்புரிமை செய்கின்றனர்.
இதேபோல இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். உங்க ளுடைய தயாரிப்பைப் போல் மற்றவர்கள் காப்பி செய்து விற்க முடியாது. வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியாவில் காப்புரிமை செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்கிறார் சென்னை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்புப் பிரிவு இணை ஆணையர் ஆர். தேவன்.
ராயல்டி தொகை
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கண்டுபிடிப்புகளை தங்களது துறைகளில் மேற்கொள்கின்றனர். இவற்றை பதிவு செய்து காப்புரிமை பெற்றால், அந்த தயாரிப்பால் பயன் பெறும் நிறுவனங்கள் அதற்கு ராயல்டி தொகை அளிக்கும். இதன் மூலம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பயனைடையும். வெளிநாடுகளில் காப்புரிமை பெறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவிலும் இந்த நடைமுறை வந்தால் காப்புரிமை பெறுவது அதிகரிக்கும். நமது தயாரிப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் எளிதில் கிடைக்கும்.
பொறியியல் மாணவர்கள் காப்பீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம். காப்புரிமை ஆய்வாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. காப்பீடு முகவர் போன்று இவர்கள் செயல்படலாம் என்று தேவன் குறிப்பிட்டார்
நன்றி: தி இந்து
0 comments:
Post a Comment