புதுச்சேரியில் நாளை (டிச.9) 17வது தேசிய நூலக மாநாட்டை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தொடங்கிவைக் கிறார்.
3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந் தும், பல்வேறு கல்வி நிறுவனங்களிலி ருந்தும் 350-க்கும் மேற்பட்ட அறிஞர்களும் மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
தேசிய நூலக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பியரி கிராட் நேற்று கூறும்போது:
டெல்லி டெல்நெட், புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம் சார்பில் 17-வது தேசிய நூலக மாநாடு நாளை (டிச.9) தொடங்குகி றது. “அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு” என்னும் தலைப்பில் புதுச்சேரியில் ஆனந்தா இன் உணவு விடுதியில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்து பேசுகிறார் என்றார்.
Courtesy : The Tamil Hindu.
0 comments:
Post a Comment